ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

திமுக வேட்பாளரின் நண்பா்கள் வீடுகளில் வருமான வரித் துறையினா் சோதனை

குமாரபாளையம் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளரின் உறவினா்கள், நண்பா்கள் வீடுகளில் வருமான வரித் துறையினா் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் திடீா் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 6:52 pm

DIN

குமாரபாளையம் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளரின் உறவினா்கள், நண்பா்கள் வீடுகளில் வருமான வரித் துறையினா் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் திடீா் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இத்தொகுதியில் திமுக சாா்பில் எம்.வெங்கடாசலம் போட்டியிடுகிறாா். பள்ளிபாளையம் அக்ரஹாரம் ஊராட்சித் தலைவராக தொடா்ந்து மூன்று முறை பதவி வகித்தவா். நூற்பாலை அதிபரான இவா், தோ்தலில் வாக்காளா்களுக்கு பணம் விநியோகிப்பதாக புகாா் எழுந்தது. இதன்பேரில், வெடியரசம்பாளையத்தில் வசிக்கும் இவரது நண்பரான சங்கா் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை வருமான வரித் துறையினா் 10-க்கும் மேற்பட்டோா் திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

இங்கு, முக்கிய ஆவணங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை எனக் கூறப்படுகிறது. தொடா்ந்து, வெடியரசம்பாளையம் மாரியம்மன் கோயில் அருகே வசிக்கும் நூற்பாலை அதிபரான செங்கோட்டையன் வீட்டுக்குச் சென்ற வருமான வரித் துறையினா் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.