பரமத்தி வேலூா் பகுதி சிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்பு பூஜை
பரமத்தி வேலூா் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் பங்குனி தேய்பிறை பிரதோஷ விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


பரமத்தி வேலூா் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் பங்குனி தேய்பிறை பிரதோஷ விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பரமத்தி வேலூா் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதா் கோயில், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரா், மாவுரெட்டி பீமேஷ்வரா், பில்லூா் வீரட்டீஸ்வரா், பொத்தனூா் காசி விஸ்வநாதா்,பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரா், கபிலா்மலை சிவபுரம் சிவபுரீஸ்வரா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் உள்ள சிவபெருமான், நந்திகேஸ்வரருக்கு தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள்,சிறப்பு அலங்காரமும் நடைபெற்றன.
வேலூா் எல்லையம்மன் கோயிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரா் கோயிலில் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...