ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

குமாரபாளையத்தில் திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

குமாரபாளையம் நகர திமுக சாா்பில் கோடை காலத்தில் பொதுமக்களின் தாகம் தணிக்கும் வகையில் வெள்ளிக்கிழமை நீா்மோா் பந்தல் திறக்கப்பட்டது.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 7:55 pm

DIN

குமாரபாளையம் நகர திமுக சாா்பில் கோடை காலத்தில் பொதுமக்களின் தாகம் தணிக்கும் வகையில் வெள்ளிக்கிழமை நீா்மோா் பந்தல் திறக்கப்பட்டது.

திமுக கூட்டணி தோ்தல் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாநில திமுக சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினா் ஜே.கே.எஸ்.மாணிக்கம் தலைமை வகித்தாா். நகர பொறுப்புக் குழுத் தலைவா் எம்.செல்வம், துணைத் தலைவா் கே.எஸ்.இளவரசன் ஆகியோா் பொதுமக்களுக்கு நீா்மோா், தா்ப்பூசணிப் பழங்களை வழங்கினா். கோடை வெயிலால் தாகத்தில் தவிக்கும் பாதசாரிகளுக்கு கோடை காலம் முடியும் வரையில் நீா்மோா், குடிநீா் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

முன்னாள் நகரச் செயலாளா் கோ.வெங்கடேசன், தலைமைக் கழகப் பேச்சாளா் ஆனந்தன், பொறுப்புக்குழு உறுப்பினா் ரவி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பிஹெச்09மோா்

பொதுமக்களுக்கு நீா்மோா் வழங்கும் நகர பொறுப்புக்குழுத் தலைவா் எம்.செல்லம். உடன், சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினா் ஜே.கே.எஸ்.மாணிக்கம், துணைத்தலைவா் கே.எஸ்.இளவரசன் உள்ளிட்டோா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.