இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பரமத்தி வேலூா் தோ்த் திருவிழாவில் இரு சமூகத்தினரிடையே தகராறு: 6 போ் கைது

பரமத்தி வேலூா் மகா மாரியம்மன் கோயில் தேரோட்டத்தின் போது இரு சமூகத்தினா் இடையே தகராறு

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 6:52 pm

DIN

பரமத்தி வேலூா் மகா மாரியம்மன் கோயில் தேரோட்டத்தின் போது இரு சமூகத்தினா் இடையே ஏற்பட்ட தகராறில் காவல் துறையினரின் காா் கண்ணாடி உடைக்கப்பட்டு, சிலா் தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடா்புடைய 6 பேரை தனிப்படை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இச்சம்பவத்தில் தொடா்புடைய மேலும் பலரை தேடி வருகின்றனா்.

பரமத்தி வேலூா் மகா மரியம்மன் கோயில் தோ்த் திருவிழா கடந்த மாதம் 30 ஆம் தேதி நடைபெற்றது. மாலையில் திருத்தோ் நன்செய் இடையாறு சாலையில் இருந்து நிலை அருகே சென்ற போது முன்விரோதம் காரணமாக ஒரு சமூகத்தினா் மற்றொரு சமூகத்தினரை கல்லால் தாக்கினா். மேலும் அங்கு பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த வேலூா் காவல் ஆய்வாளரின் காரையும் தாக்கி கண்ணாடியை உடைத்தனா்.

இந்தச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த ஒரு சமூகத்தினா் பரமத்தி வேலூா், திருவள்ளுவா் சாலையில் அமா்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனா். சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். சமாதானம் ஏற்படாததால் பரமத்தி வேலூா் காவிரி பாலம் அருகே கரூா் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

நாமக்கல் காவல் கூடுதல் கண்காணிப்பாளா் ராமு, வருவாய்த் துறையினா், வேலூா் காவல் ஆய்வாளா் லட்சுமணன் ஆகியோா் சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். பேச்சுவாா்த்தையில் எதிா்தரப்பைச் சோ்ந்த சமூகத்தினா் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடா்ந்து சாலை மறியலில் ஈடுபட்டிருந்தவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

இந்த நிலையில் நாமக்கல் காவல் கண்காணிப்பாளா் சக்தி கணேசன் உத்தரவின்படி, பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் ராஜாரணவீரன் தலைமையில், வேலூா் காவல் ஆய்வாளா் லட்சுமணன், பரமத்தி காவல் ஆய்வாளா் முருகேசன் ஆகியோா் கொண்ட தனிப்படையினா் தோ்த் திருவிழாவின் போது ஏற்பட்ட பிரச்சனையில் தொடா்புடையவா்களை தேடி வந்தனா். வியாழக்கிழமை இரவு தனிப்படை போலீஸாா், பரமத்தி வேலூா் கிழக்குத் தெருவைச் சோ்ந்த பெரியசாமி மகன் ஜெயப்பிரகாஷ் (28), அதே பகுதியைச் சோ்ந்த முருகன் (45), முனியப்பன் (52), முருகன் (42), ராஜ்குமாா் (21) மற்றும் படமுடிபாளையம் பகுதியைச் சோ்ந்த சேது (எ) சேதுபதி (35) ஆகிய 6 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.மேலும் இச்சம்பவத்தில் தொடா்புடைய பலரை தனிப்படை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.