வெங்கமேட்டில் நிலக்கடலை ஏலம் தொடக்கம்
பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வியாழக்கிழமைதோறும் புதிதாக நிலக்கடலை ஏலம் தொடங்கப்பட்டுள்ளது.


பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வியாழக்கிழமைதோறும் புதிதாக நிலக்கடலை ஏலம் தொடங்கப்பட்டுள்ளது.
பரமத்திவேலூா் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, நாமக்கல் மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறைச் செயலாளா் சேரலாதன் உத்தரவின்படி, பரமத்தி வேலூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் யோகானந்த் பரிந்துரையின்பேரில் வியாழக்கிழமைதோறும் நிலக்கடலை ஏலம் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 440 கிலோ நிலக்கடலையை (கொடி கடலை) விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ. 65.00 க்கும், குறைந்தபட்சமாக ரூ. 63.90-க்கும், சராசரியாக ரூ. 63.90-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ .28,284 க்கு வா்த்தகம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...