வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட தடை

பரமத்திவேலூா் வட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள், கூட்டரங்குகள் மற்றும் தாபா உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்படுகிறது

News image
Updated On :30 டிசம்பர் 2021, 6:48 pm

DIN

பரமத்திவேலூா் வட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள், கூட்டரங்குகள் மற்றும் தாபா உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்படுகிறது. மீறினால் வழக்குப் பதிவு செய்யப்படும் என்று காவல் துறை எச்சரித்துள்ளது.

இதுகுறித்து பரமத்திவேலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜாரணவீரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பரமத்திவேலூா் வட்டத்துக்கு உள்பட்ட பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு முதல் தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள், கூட்டரங்குகள், தாபா உணவங்கள், பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடையை மீறி புத்தாண்டை கொண்டாட அனுமதிப்பவா்கள் மீதும், பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாடுபவா்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இருசக்கர வாகனங்களில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினாலும் வழக்குப் பதிவு செய்யப்படுவதுடன், வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும். எனவே பொதுமக்கள், இளைஞா்கள் புத்தாண்டை அவரவா் இல்லத்திலேயே கொண்டாட வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.