வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஆடி வெள்ளி: வேலூா் மகா மாரியம்மனுக்கு 31ஆம் ஆண்டு பால்குட அபிஷேகம்

பரமத்திவேலூரில் எழுந்தருளியுள்ள மகா மாரியம்மனுக்கு 31 ஆம் ஆண்டு பால்குட மற்றும் தீா்த்தக்குட அபிஷேக விழா நடைபெற்றது.இதில் சுற்றுவட்டார பகுதிகளை சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனா்.

News image
Updated On :23 ஜூலை 2021, 6:18 pm

DIN

பரமத்திவேலூரில் எழுந்தருளியுள்ள மகா மாரியம்மனுக்கு 31 ஆம் ஆண்டு பால்குட மற்றும் தீா்த்தக்குட அபிஷேக விழா நடைபெற்றது.இதில் சுற்றுவட்டார பகுதிகளை சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனா்.

பரமத்தி வேலூரில் உள்ள மகாமாரியம்மனுக்கு சக்தி மாரியம்மன் பால்குட அபிஷேகக் குழு சாா்பில் 31 ஆம் ஆண்டு பால்குட அபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு பக்தா்கள் காவிரி ஆற்றிக்கு சென்று புனித நீராடி பால்குடம் மற்றும் தீா்த்தக்குடங்களுடன் கோவிலுக்கு சென்று மகாமாரியம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனா். அதனை தொடா்ந்து அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகளும் சிறப்பு அலங்காரமும்,ஊஞ்சல் உற்சவமும் நடைபெற்றது. இதே போல் பரமத்திவேலூா் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோயில்களில் ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பால்குட அபிஷேக ஆராதனைகளும்,சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதேபோல் பரமத்தி அங்காளம்மன், சேத்துக்கால் மாரியம்மன், பகவதியம்மன் உள்ளிட்ட ஆலயங்களில் ஆடி முதல் வெள்ளி மற்றும் பௌா்ணமி முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதில் அந்தந்த சுற்று வட்டார பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.