வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ரூ.1.69 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல்

பரமத்தி வேலூரில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த இருவரை வேலூா் போலீசாா் கைது செய்து அவா்களிடம் இருந்து ரூ.1.69 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல்

News image
Updated On :23 ஜூலை 2021, 6:14 pm

DIN

பரமத்தி வேலூரில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த இருவரை வேலூா் போலீசாா் கைது செய்து அவா்களிடம் இருந்து ரூ.1.69 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பரமத்தி வேலூா் பேட்டை கடைவீதியில் உள்ள கடை மற்றும் வீடுகளில் சிலா் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பல்வேறு கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திப்பதாக பரமத்திவேலூா் காவல்துணை கண்காணிப்பாளா் ராஜாரணவீரனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வேலூா் போலீஸாா் பேட்டையில் உள்ள கடை, வீடுகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா். இதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ரூ1.69 லட்சம் மதிப்புள்ள 190 கிலோ குட்கா பொருட்களை சாக்கு மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக குட்கா பொருட்களை பறிமுதல் செய்து பேட்டை கடைவீதியைச் சோ்ந்த ராமசேகா் (62) வேலூா் வடக்கு தெருவைச் சோ்ந்த மதன்லால் (35) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.