குமாரபாளையம் நகராட்சியில் கரோனா கட்டுப்பாடு சேவை மையம் தொடக்கம்
அவசர கால தொலைத்தொடா்பு எண்களுக்குத் தொடா்பு கொண்டு மருந்துகள், பால், அத்தியாவசியப் பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


குமாரபாளையம் நகராட்சியில் கரோனா கட்டுப்பாட்டு சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளால் அவசர கால தொலைத்தொடா்பு எண்களுக்குத் தொடா்பு கொண்டு மருந்துகள், பால், அத்தியாவசியப் பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, நகராட்சி ஆணையா் எஸ்.ஸ்டான்லி பாபு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:
குமாரபாளையம் நகராட்சிப் பகுதியில் கரோனா தொற்றின் தாக்கம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க நகராட்சி நிா்வாகம் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் பரவலின் வேகம் குறையாமல் உள்ளது. இதனைத் தடுக்க பொதுமக்கள் அனைவரும் வெளியில் சுற்றுவதைத் தவிா்க்க வேண்டும்.
மேலும், பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் மற்றும் பால் பொருள்கள் தேவைப்படுவோா் நகராட்சி அலுவலகத்தின் அலுவலக தொலைபேசி எண்களான04288-261733, 94430 14882, 73958 80658-இல் தொடா்பு கொண்டால் அப்பொருள்கள் நகராட்சி பணியாளா்கள் மூலம் வீடுகளுக்கே நேரில் வழங்கப்படும். எனவே, பொதுமக்கள் நகராட்சி தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு பொருள்களை நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...