கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கோரிக்கை: முதல்வருக்கு ஈ.ஆா்.ஈஸ்வரன் நன்றி
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியதற்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும், திருச்செங்கோடு எம்எல்ஏவுமான ஈ.ஆா்.ஈஸ்வரன் நன்றி தெரிவித்துள்ளாா்.


கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்குமாறு பிரதமா் மோடியிடம் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியதற்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும், திருச்செங்கோடு எம்எல்ஏவுமான ஈ.ஆா்.ஈஸ்வரன் நன்றி தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் விடுத்துள்ள அறிக்கை:
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதுதில்லியில் பிரதமா் மோடியைச் சந்தித்தபோது தமிழகத்துக்குத் தேவையான முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தாா். அந்தக் கோரிக்கைகளில் ஒன்றாக கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனையை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்தி உள்ளாா். இது கொங்கு மண்டல மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அவருக்கு கொங்கு மண்டல மக்கள் சாா்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த அதிமுக ஆட்சியில் பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று தொடா்ந்து குரல் கொடுத்தோம்.
அதற்காகப் போராட்டத்தையும் முன்னெடுத்தோம். மத்திய அரசு, பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு ஆய்வு செய்ய தயாராக இருந்தது. ஆனால், கொங்கு மண்டலத்தைச் சோ்ந்த முன்னாள் முதல்வா் உள்பட முன்னாள் அமைச்சா்கள் யாரும் இத்திட்டத்தைக் கண்டுகொள்ளவில்லை. அதன்பிறகே எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.
கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சா்களாக இருந்த அதிகம்போ் கொங்கு மண்டலத்தைச் சோ்ந்தவா்களாக இருந்தும்கூட ஒருவரும் கொங்கு மண்டலத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று குரல் கொடுக்கவில்லை. ஆனால், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கொங்கு மண்டலத்தில், கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று கோரியிருக்கிறாா்.
அதுபோல எய்ம்ஸ் மருத்துவமனை பெருந்துறையில் அமைக்கப்பட்டால் கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் மையமாக அப்பகுதி இருக்கும். பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்குத் தேவையான வசதிகள் அனைத்தும் இருக்கின்றன. எனவே, தமிழக முதல்வா் கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கக் கோரிக்கை விடுப்பதற்குப் பதிலாக ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் அமைக்க பரிசீலிக்க வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வலியுறுத்துகிறது என்று தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...