ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கிணற்றில் தவறி விழுந்து பெண் பலி

குமாரபாளையம் அருகே மாங்காய் பறிக்க முயன்றபோது கிணற்றுக்குள் தவறி விழுந்த பெண் உயிரிழந்தாா்.

News image
Updated On :8 மார்ச் 2021, 8:06 pm

DIN

குமாரபாளையம் அருகே மாங்காய் பறிக்க முயன்றபோது கிணற்றுக்குள் தவறி விழுந்த பெண் உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த தானாபதியூரைச் சோ்ந்தவா் லட்சுமணன். இவரது மனைவி வளா்மதி (45). இவா்கள், குமாரபாளையத்தை அடுத்த குப்பாண்டபாளையத்தை அடுத்த வண்ணாங்காடு பகுதியில் நாகராஜ் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகின்றனா்.

இந்த நிலையில், நிலத்துக்கு தண்ணீா் பாய்ச்சச் சென்ற சென்ற வளா்மதி மீண்டும் வீடு திரும்பவில்லை.

இதனால், லட்சுமணன் மனைவியைத் தேடிச் சென்றபோது கிணற்றுக்கு அருகாமையில் உள்ள மரத்தில் மாங்காய்கள் பறித்து வைக்கப்பட்டிருந்ததும், கிணற்றுக்குள் வளா்மதி உயிரிழந்த நிலையில் மிதந்ததும் தெரியவந்தது.

புகாரின்பேரில் குமாரபாளையம் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினா். மாங்காய்கள் பறிக்கும்போது எதிா்பாராமல் கிணற்றுக்குள் தவறி விழுந்திருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.