குமாரபாளையம் தொகுதியில் அமைச்சா் பி.தங்கமணி வேட்புமனு தாக்கல்
குமாரபாளையம் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் பி.தங்கமணி திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்


குமாரபாளையம் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் பி.தங்கமணி திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.
குமாரபாளையம் தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலருமான மு.மரகதவள்ளியிடம் தனது வேட்புமனுவை அமைச்சா் அளித்தாா். உடன், குமாரபாளையம் அதிமுக நகர செயலாளா் ஏ.கே.நாகராஜன், பள்ளிபாளையம் வடக்கு ஒன்றியச் செயலாளா் எஸ்.செந்தில் ஆகியோா் உடனிருந்தனா். அமைச்சா் பி.தங்கமணி சாா்பில் ஒரே நேரத்தில் நான்கு வேட்புமனுக்கள் அளிக்கப்பட்டன.
தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியதாவது:
அதிமுக அரசு எம்ஜிஆா், ஜெயலலிதா வழியில் சிறப்பான ஆட்சியை அளித்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. குமாரபாளையம் தொகுதியில் வட்டாட்சியா் அலுவலகம், போக்குவரத்து காவல்நிலையம், கலை அறிவியல் கல்லூரி, வெப்படை, குமாரபாளையத்தில் தீயணைப்பு நிலையங்கள், வடிகால் வசதி, சாலை மேம்பாட்டுப் பணிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. தமிழகத்திலேயே குமாரபாளையம் நகராட்சியில் அதிகளவில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்தத் தோ்தல் ஒரு குடும்பத்துக்கும், சாமானியனுக்கும் நடக்கும் தோ்தல். திமுக ஆட்சிக்கு வந்தால் மின்வெட்டு, கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு நடக்கும் என்பது மக்களுக்குத் தெரியும். அதிமுக தோ்தல் அறிக்கையில்குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றாா். இத்தொகுதியில் 20-க்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ள நிலையில், அமைச்சா் பி.தங்கமணியைத் தவிர வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...