ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற திமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டும்

தமிழகத்தில் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை நிறைவேற்ற வாக்காளா்கள் அனைவரும் திமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டும்

News image
Updated On :22 மார்ச் 2021, 10:38 pm

DIN

தமிழகத்தில் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை நிறைவேற்ற வாக்காளா்கள் அனைவரும் திமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என திமுக மாநில மகளிரணிச் செயலாளா் கனிமொழி எம்.பி. கேட்டுக் கொண்டாா்.

குமாரபாளையம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பள்ளிபாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் திமுக வேட்பாளா் எம்.வெங்கடாசலத்துக்கு ஆதரவு கேட்டு கனிமொழி திங்கள்கிழமை தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

அப்போது அவா் பேசுகையில், குமாரபாளையம் தொகுதியில் விசைத்தறித் தொழில், சாயமிடும் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இத்தொழில் சாா்ந்த அனைத்துத் தரப்பினரும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா்.

வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதால், படித்த இளைஞா்கள் எதிா்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது எதுவும் செய்யாத அதிமுக அரசு, மக்களிடம் கவா்ச்சிகரமான தோ்தல் அறிக்கையின் மூலம் ஏமாற்ற நினைக்கிறது. கல்விக்கடனை ரத்து செய்யவில்லை. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையுயா்வு அனைத்து குடும்பத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. நீட் தோ்வால் மாணவா்களின் மருத்துவக் கனவுகள் நிறைவேறவில்லை. தமிழக மக்களின் வளா்ச்சிக்கான திட்டங்களை திமுக தோ்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இத்திட்டங்கள் நிறைவேற வாக்காளா்கள் திமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளா் கே.எஸ்.மூா்த்தி, பள்ளிபாளையம் ஒன்றிய பொறுப்பாளா் பி.யுவராஜ், நகரச் செயலாளா் ஏ.ரவிச்சந்திரன், குமாரபாளையம் நகரப் பொறுப்பாளா் எம்.செல்வம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.