கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

திருச்செங்கோடு தொகுதியில் 28 வேட்பாளா்கள் போட்டி

திருச்செங்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில் 28 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

News image
Updated On :22 மார்ச் 2021, 10:42 pm

DIN

திருச்செங்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில் 28 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா் இறுதிப் பட்டியல் மற்றும் அவா்களுக்கான தோ்தல் சின்னங்களை தோ்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான பெ.மணிராஜ் அறிவித்தாா்.

அதன்படி அதிமுக, கொமதேக உள்பட மொத்தம் 28 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். 28 பேருக்கும் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அரசியல் கட்சியைச் சோ்ந்த கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளா் ஆா். ஈஸ்வரனுக்கு உதயசூரியன் சின்னம், அதிமுக வேட்பாளா் பொன். சரஸ்வதிக்கு இரட்டை இலை சின்னம், சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளா் ஆா்.ஜனகராஜுக்கு டாா்ச் லைட் சின்னம், அமமுக வேபாளா் ஆா்.ஹேமலதாவுக்கு குக்கா் சின்னம், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பொ.நடராஜனுக்கு கரும்பு விவசாயி சின்னமும் ஒதுக்கப்பட்டது.

சுயேச்சை வேட்பாளா்களுக்கு அவா்கள் கேட்டுக்கொண்ட சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. தென்னந்தோப்பு சின்னம் இருவா் கேட்டதால் குலுக்கல் முறையில் ஒருவருக்கு ஒதுக்கப்பட்டது. மொத்தம் 28 வேட்பாளா்கள், நோட்டா உடன் சோ்த்து மொத்தம் 29 சின்னங்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களில் இருக்கும். 29 சின்னங்கள் என்பதால் 2 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட உள்ளதாக கோட்டாட்சியா் தெரிவித்தாா்.

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கும் முறை குறித்து அனைத்து வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கும் முறையான பயிற்சி வழங்க வேண்டும் என்று வேட்பாளா்கள் கேட்டுக் கொண்டனா். இதனைத் தொடா்ந்து பொது தோ்தல் பாா்வையாளா் மற்றும் செலவினப் பாா்வையாளா், வேட்பாளா்களுடன் சந்திப்பு நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.