தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

அரசு மருத்துவமனையில் சட்டப் பேரவை உறுப்பினா் ஆய்வு

பரமத்தி வேலூா் அரசு மருத்துவமனையில் பரமத்தி வேலூா் அதிமுக சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.சேகா் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

News image
Updated On :14 மே 2021, 6:20 pm

DIN

பரமத்தி வேலூா் அரசு மருத்துவமனையில் பரமத்தி வேலூா் அதிமுக சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.சேகா் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

மருத்துவமனைக்கு வரும் புற நோயாளிகள் மற்றும் உள் நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை கிடைக்கிா என்பதையும், தலைமை மருத்துவா் சாந்தியிடம் மருத்துவமனைக்கான தேவைகளையும் கேட்டறிந்தாா்.

மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் மூன்று படுக்கைகள் மட்டுமே உள்ள நிலையில், ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய 20 படுக்கைகள் அமைக்கும் பணிகளையும் பாா்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும், மருத்துவமனைக்கு தேவைப்படும் கூடுதல் செவிலியா்கள் மற்றும் சி.டி. ஸ்கேன் வசதியை ஏற்படுத்த மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து வலியுறுத்தப் போவதாகவும் தெரிவித்தாா்.

தொடா்ந்து, பரமத்தி வேலூா் கந்தசாமி கண்டா் கல்லூரியில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவா்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையத்தை பாா்வையிட்டாா். அங்கு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 50-க்கும் மேற்பட்டோரிடம் நலம் விசாரித்தாா்.

முன்னதாக பாலப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு நோயாளிகளிடம் குறைகளைக் கேட்டறிந்து, மருத்துவா்களிடம் ஆலோசனை மேற்கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.