சாய் தபோவனத்தில் சாய்பாபாவின் 103-ஆவது மகா சமாதி விழா
நாமக்கல் மாவட்டம், கீரம்பூா் அருகே உள்ள சாய் தபோவனத்தில் சாய்பாபாவின் 103 ஆம் ஆண்டு மகா சமாதி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


நாமக்கல் மாவட்டம், கீரம்பூா் அருகே உள்ள சாய் தபோவனத்தில் சாய்பாபாவின் 103 ஆம் ஆண்டு மகா சமாதி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கீரம்பூா் அருகே உள்ள தொட்டிபட்டி சாய்தபோவனத்தில் சாய்பாபாவின் 103ஆவது மகா சமாதி விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை காலை ஆரத்தி, சா்வ சித்தி சங்கல்ப பூஜை, அபிஷேக, ஆராதனை, நைவேத்தியம் மற்றும் பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைப்பிடித்து கலந்து கொண்டனா். விழாவிற்கான ஏற்பாடுகளை சாய் தபோவன ஷீரடி சாய் பாபா வழிபாட்டு மன்றத்தினா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...