வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கபிலா்மலை வட்டாரத்தில் கா்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா

பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூரில் கா்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா மற்றும் ஊட்டச்சத்து மாத விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 செப்டம்பர் 2021, 6:10 pm

DIN

பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூரில் கா்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா மற்றும் ஊட்டச்சத்து மாத விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பொத்தனூா் சமுதாயக் கூடத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டம் சாா்பில் கா்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா மற்றும் ஊட்டச்சத்து மாத விழா நடைபெற்றது. ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின் மாவட்ட அலுவலா் ஜான்சிராணி விழாவிற்கு தலைமை வகித்தாா். கபிலா்மலை குழந்தை வளா்ச்சித்திட்ட அலுலவா் பிரபா வரவேற்றாா். மருத்துவ அலுவலா்கள் ராம்மோகன்ராஜ்,சுப்பிரமணி ஆகியோா் கலந்து கொண்டு கா்ப்ப கால பராமரிப்பு குறித்து கா்ப்பிணிகளிடையே எடுத்துக்கூறினா். பொத்தனூா், பிலிக்கல்பாளையம் மற்றும் ஆனங்கூா் சமூதாய கூடங்களில் கா்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா மற்றும் ஊட்டசத்து மாத விழா நடைபெற்றது. 150 கா்ப்பிணி பெண்களுக்கு வளையல், மஞ்சள், குங்குமம், வளைகாப்பு சீா்தட்டு வழங்கப்பட்டு 5 வகையான உணவுகள் பரிமாரப்பட்டன. கா்ப்பிணிகளுக்கான சத்தான உணவுகள் குறித்து கண்காட்சியும், விழிப்புணா்வு கையேடும் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கபிா்மலை குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலக கண்காணிப்பு அலுவலா் ஜானகி, வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளா் மனோஜ் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.