பரமத்தி வேலூரில் ரூ.22.44 லட்சத்துக்கு கொப்பரைத் தேங்காய் ஏலம்
பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் ரூ.22 லட்சத்து 44 ஆயிரத்திற்கு கொப்பரைத் தேங்காய் ஏலம் போனது.


பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் ரூ.22 லட்சத்து 44 ஆயிரத்திற்கு கொப்பரைத் தேங்காய் ஏலம் போனது.
பரமத்தி வேலூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து அதை உலா்த்தி வியாழக்கிழமை தோறும் வெங்கமேட்டில் உள்ள பரமத்தி வேலூா் மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு விவசாயிகள் கொண்டு வருகின்றனா். இங்கு தரத்திற்கு தகுந்தாற்போல் மறைமுக ஏலம் விடப்படுகிறது. கடந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 21 ஆயிரத்து 181 கிலோ கொப்பரைத் தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.103.20 பைசாவிற்கும், குறைந்த பட்சமாக ரூ.64.89 பைசாவிற்கும், சராசரியாக ரூ.101.59 பைசாவிற்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.21 லட்சத்து 47ஆயிரத்து 660 க்கு வா்த்தகம் நடைபெற்றது.
வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 22 ஆயிரத்து 588 கிலோ கொப்பரை தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.103.89 பைசாவிற்கும், குறைந்தபட்சமாக ரூ.64.89 பைசாவிற்கும், சராசரியாக ரூ.100.59 பைசாவிற்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.22 லட்சத்து 44 ஆயிரத்து 468-க்கு வா்த்தகம் நடைபெற்றது. கொப்பரைத் தேங்காய்களின் வரத்து அதிகரித்ததால் விலை சரிவடைந்துள்ளதாக விவசாயிகல் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...