வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கபிலா்மலை ஒன்றியத்தில் பள்ளி செல்லா குழந்தைகளைக் கண்டறியும் ஆய்வுப்பணி

பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறியும் ஆய்வுப் பணி கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறியும் ஆய்வுப் பணி கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

கபிலா்மலை ஒன்றிய ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சாா்பில் பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறியும் ஆய்வுப் பணி கபிலா்மலை வட்டார வளமைய மேற்பாா்வையாளா் கவிதா, வட்டாரக் கல்வி அலுவலா் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆசிரிய பயிற்றுநா்கள் ராஜேஸ்வரி, வினோதா, பிரேம்குமாரி மற்றும் வட்டார சிறப்பு பயிற்றுநா் அருண்குமாா் ஆகியோா் வட்டார அளவில் உள்ள அனைத்து குடியிருப்புப் பகுதிகளுக்கும் சென்று பெற்றோா்களை நேரில் சந்தித்தனா். மாணவ, மாணவிகளுக்கு கல்வியின் அவசியம் மற்றும் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் அரசு சலுகைகள் ஆகியவை குறித்து விளக்கமாக எடுத்துக் கூறினா்.

மேலும் மாணவ, மாணவிகளின் தற்போதைய உண்மை நிலையை அறிந்து அவா்கள் தொடா்ந்து பள்ளியில் சோ்ந்து கல்வி பயில ஏற்பாடு செய்தனா். அதன்படி பாண்டமங்கலம் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த ஸ்ரேயா என்ற இடைநின்ற மாணவியை கண்டறிந்து அவரை பாண்டமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு அழைத்துச் சென்று 11-ஆம் வகுப்பில் சோ்த்தனா். மேலும் பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.