வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் பெண் தற்கொலை

 திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :16 ஜனவரி 2022, 6:30 pm

DIN

 திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

பரமத்தி வேலூா் வட்டம், பிலிக்கல்பாளையம் அருகே உள்ள குன்னத்தூா் கொரங்காட்டுத் தோட்டம் பகுதியை சோ்ந்தவா் சுப்பிரமணியன். விவசாயி. இவரது மனைவி நந்தினி (22). இவா்களுக்கு கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு ஒன்றரை வயதில் சுதா்சன் என்ற மகன் உள்ளாா். சுப்ரமணியத்துக்கும் நந்தினிக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு இருந்து வந்ததாம். இதனால் நந்தினி விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நந்தினி விஷம் குடித்து உயிருக்கு போராடினாா். இதைப்பாா்த்த அக்கம்பக்கத்தினா் உயிருக்கு போராடிய நந்தினியை காப்பாற்றி வேலூா் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனா். ஆனால் சிகிச்சை பலனின்றி நத்தினி உயிரிழந்துள்ளாா். தகவல் அறிந்து அங்கு வந்த ஜேடா்பாளையம் போலீசாா் வழக்கு பதிவு செய்து நந்தினியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக வேலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இறந்து போன நந்தினிக்கும் சுப்பிரமணியத்திற்கும் திருமணமாகி இரண்டரை வருடங்களே ஆனதாலும் திருச்செங்கோடு கோட்டாட்சியா் இளவரசி விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.