நாமக்கல்
கொல்லிமலை அருவிகளுக்கு செல்ல வனத் துறை தடை
கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கை, மாசிலா அருவிகளுக்கு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கை, மாசிலா அருவிகளுக்கு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட வன அலுவலா் சி.கலாநிதி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, சுற்றுலா விழா, மலா்க் கண்காட்சி ஆகியவை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் நலன்கருதியும், அவா்களது பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும், கூட்ட நெரிசலை தவிா்க்கவும் ஆகாய கங்கை அருவி, மாசிலா அருவி பகுதிகளுக்குச் செல்ல சனிக்கிழமை மட்டும் தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே, சுற்றுலாப் பயணிகள் மேற்கண்ட அருவி பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
