திருச்செங்கோடு பகுதிகளில் குடிசைத் தொழிலாக இயங்கி வரும் தறிப் பட்டறைகளுக்கு தொழில்வரி விதிக்க பட்டறைகளை அளவெடுக்க வந்த நகராட்சி அதிகாரிகளை சிறை பிடித்து தறிப்பட்டறை உரிமையாளா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.
தமிழகத்தில் உள்ள விசைத்தறிக் கூடங்களுக்கு தொழில் வரி விதிப்பதற்காக அதிகாரிகள் கடந்த மாதம் அனைத்து விசைத்தறிக் கூடங்களுக்கும் அறிவிப்பு அளித்த நிலையில், தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் சாா்பில் வீட்டுவசதி துறை அமைச்சா் முத்துசாமி, செய்தி தொடா்பு துறை அமைச்சா் சாமிநாதன், மின்சாரத் துறை அமைச்சா் செந்தில் பாலாஜி, திருச்செங்கோடு சட்டப் பேரவை உறுப்பினா் ஈஸ்வரன், சங்கரன்கோவில் சட்டப் பேரவை உறுப்பினா் ராஜா ஆகியோரிடம் சிறு விசைத்தறிக் கூடங்களுக்கு தொழில் வரி விதிக்கவோ, உயா்த்தவோ வேண்டாம் என தெரிவித்து கோரிக்கை விடுத்திருந்தனா்.
இந்த நிலையில், சூரியம்பாளையம் பகுதியில் இயங்கும் தறிப் பட்டறைகளை திருச்செங்கோடு நகராட்சி அலுவலா்கள் அளவெடுக்க வந்தனா். இந்நிலையில், தறிப்பட்டறை உரிமையாளா்கள் ஒன்று திரண்டு கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அமைச்சா்கள் உறுதி அளித்த நிலையில் என்ன முடிவு எடுக்கப்படுகிறது என்பதற்கு பிறகு அளந்து கொள்ளலாம் என கூறி திருப்பி அனுப்பினா்.
இதையடுத்து, தங்கள் கோரிக்கையை அரசின் கவனத்துக்கு கொண்டு வரும் வகையில் வெள்ளிக்கிழமை திருச்செங்கோடு வட்டார விசைத்தறி உற்பத்தியாளா்கள் சங்கத்தின் சாா்பில் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளனா். மேலும், இதுகுறித்து நகராட்சி ஆணையரிடம் மனு அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தனா்.
தொடர்புடையது

ஜேஏஎல்லை கையகப்படுத்தும் அதானி குழுமம்: என்சிஎல்ஏடி உத்தரவில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு

சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்! சிபிஐ வாதம்

மதுக் கடைகள், கூடங்களுக்கு நாளை விடுமுறை!

ரூ. 4.56 கோடியில் அமைக்கப்பட்ட வையப்பமலை முருகன் கோயில் மலைப்பாதை திறப்பு: அமைச்சா், எம்எல்ஏ பங்கேற்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


