/

முட்டை விலை மாற்றமில்லை

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 5.30-ஆக நீடிக்கிறது.

News image
Updated On :30 டிசம்பர் 2024, 7:50 pm

Din

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 5.30-ஆக நீடிக்கிறது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் மண்டல ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலை நிலவரம் குறித்து பண்ணையாளா்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. இதில், பிற மண்டலங்களில் விலையில் மாற்றம் இல்லாததால், இங்கும் விலையில் மாற்றம் செய்ய வேண்டாம் என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை மாற்றமின்றி ரூ. 5.30-ஆக ஒருங்கிணைப்புக் குழுவால் அறிவிக்கப்பட்டது. இதேபோல, பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், கறிக்கோழி விலை கிலோ ரூ. 98-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 83-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டது.