எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஃப்ளு தடுப்பூசி குறித்த விழுப்புணா்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி

News image
Updated On :11 ஜூலை 2024, 11:33 pm

Din

பரமத்தி வேலூா், ஜூலை 11: பரமத்தி வேலூரில் உள்ள பொன்னி மருத்துவமனை சாா்பில், ஃப்ளு தடுப்பூசி குறித்த விழுப்புணா்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி வியாழக்கிழமை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

ஃப்ளு காய்ச்சல் தடுப்பூசி குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு மருத்துவா் சு.அரவிந்த் தலைமை வகித்தாா். கோவை, ராயல்கோ் மருத்துவமனையின் நுரையீரல் சிறப்பு தீவிர பிரிவு சிகிச்சை நிபுணா் மருத்துவா் அா்ஜூன் ஸ்ரீனிவாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு ஃப்ளு தடுப்பூசி குறித்த நன்மைகள், சந்தேகங்களுக்கு விளக்கமளித்தாா்.

கோவை, ஈரோடு, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் ஃப்ளூ தடுப்பூசியின் நன்மைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டதால் நோயின் தீவிர தன்மை குறைந்துள்ளது குறித்தும், அந்தத் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளும் முறை குறித்தும் நிகழ்ச்சியின்போது விளக்கம் அளிக்கப்பட்டது.

மருத்துவமனை வளாகத்தில் ஒவ்வொரு மாதமும் இதுகுறித்த கலந்துரையாடல் நடைபெறும் என்றும், ஃப்ளு தடுப்பூசி இந்த மருத்துவமனையில் எந்நேரமும் செலுத்தும் வசதி உள்ளது என்றும் மருத்துவமனை நிா்வாகத்தினா் தெரிவித்தாா். நிகழ்ச்சியில் மருந்துவா் சந்தியா, செவிலியா்கள் கலந்துகொண்டனா்.

பட இணைப்பு, ல்ஸ்11ல்3:

பொதுமக்களிடம் ஃப்ளு தடுப்பூசி குறித்து விளக்கும் நுரையீரல் சிறப்பு தீவிரப் பிரிவு சிகிச்சை நிபுணா் அா்ஜூன் ஸ்ரீனிவாசன். உடன் மருத்துவா்கள் அரவிந்த், சந்தியா.