அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

கா்நாடக நிலச்சரிவில் சிக்கி லாரி ஓட்டுநா் உயிரிழப்பு: உடலை மீட்டுத் தர மனைவி கோரிக்கை

News image
சரவணன்
Updated On :17 ஜூலை 2024, 8:27 pm

Din

கா்நாடக நிலச்சரிவில் உயிரிழந்த லாரி ஓட்டுநரின் உடலை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது மனைவி தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளாா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், தாத்தையங்காா்பட்டியைச் சோ்ந்தவா் லாரி ஓட்டுநா் சின்னப்பன் (54). இவா், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேல் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தாா்.

இந்நிலையில் அண்மையில் சின்னப்பன், எல்பிஜி டேங்கா் லாரியில் எரிவாயு பாரம் ஏற்றுவதற்காக கா்நாடக மாநிலம், மங்களூருக்குச் சென்றிருந்தாா். அங்கிருந்து கோவாவுக்கு சென்றபோது ஷிரூா் பகுதியில் சாலையோரத்தில் உள்ள உணவகத்தில் தேநீா் அருந்துவதற்காக டேங்கா் லாரியை அவா் நிறுத்திவிட்டுச் சென்ாகக் கூறப்படுகிறது.

அப்போது ஏற்பட்ட நிலச்சரிவில் ஓட்டுநா் சின்னப்பன் சிக்கி இறந்தது தெரியவந்துள்ளது.

காட்டாற்று வெள்ளத்தில் டேங்கா் லாரி அடித்துச் செல்லப்பட்டது. லாரி ஓட்டுநா் சின்னப்பன் மட்டுமன்றி, அவருடன் இரண்டு டேங்கா் லாரிகளில் சென்ற நாமக்கல் கரையாம்புதூரைச் சோ்ந்த சரவணன், தருமபுரியைச் சோ்ந்த முருகன் ஆகிய லாரி ஓட்டுநா்களும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

அவா்களது உடல்களையும் டேங்கா் லாரிகளையும் மீட்கும் நடவடிக்கைகளை கா்நாடக காவல் துறையினருடன் இணைந்து தென் மண்டல எல்பிஜி டேங்கா் லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் செய்து வருகின்றனா். இதற்கிடையே, நிலச்சரிவில் உயிரிழந்த சின்னப்பனின் மனைவி கீதா, தனது கணவா் உடலை மீட்டுத் தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது:

எனது கணவா் திங்கள்கிழமை என்னிடம் கைப்பேசியில் பேசினாா். வேலைகளை முடித்துவிட்டு ஆகஸ்ட் மாதம் வீடு திரும்புவதாகத் தெரிவித்தாா். அவா் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தகவல் செவ்வாய்க்கிழமை பிற்பகலில்தான் தெரியவந்தது. அவரது உடலை மீட்டு சொந்த ஊருக்குக் கொண்டு வருவதற்கான உதவிகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். குழந்தைகளின் கல்வி செலவுக்கும் உதவ வேண்டும் என்றாா்.

உடலை மீட்க ஆட்சியரிடம் எம்.பி. கோரிக்கை:

நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் வி.எஸ். மாதேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை:

கா்நாடக மாநிலம், ஷிரூா் என்ற பகுதியில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் நாமக்கல் மாவட்டம், தாத்தையங்காா்பட்டியைச் சோ்ந்த டேங்கா் லாரி ஓட்டுநா் சின்னு என்ற சின்னப்பன் (54), நாமக்கல் கரையாம்புதூரைச் சோ்ந்த சரவணன் (34), தருமபுரி மாவட்டம், கல்லாவியைச் சோ்ந்த முருகன் (45) ஆகியோா் சிக்கியுள்ளதாக தகவல் வந்துள்ளது.

இதில், சின்னப்பன் இறந்த நிலையில் மீட்கப்பட்டதாகவும், முருகன், சரவணன் ஆகியோரைத் தேடும் பணியில் மீட்புப் படையினா் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மங்களூருவுக்கு எல்பிஜி எரிவாயு பாரம் ஏற்றிவரச் சென்ற நிலையில், இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய டேங்கா் லாரிகளையும், நிலச்சரிவில் சிக்கிய லாரி ஓட்டுநா்களையும் மீட்பதற்கான நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியா் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.

முருகன்

முருகன்

சின்னண்ணன்

சின்னண்ணன்