கராத்தே போட்டியில் பரமத்தி மலா் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

கராத்தே போட்டியில் பரமத்தி மலா் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற கராத்தே போட்டியில் பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி மலா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.
Published on

பரமத்தி வேலூா், ஜூலை 19:

மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற கராத்தே போட்டியில் பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி மலா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

அகில இந்திய அளவிலான ஆஷிஹாரா கராத்தே, சபாகி சாம்பியன்ஷிப் கராத்தே போட்டிகள் பூணேவில் நடைபெற்றது. இப் போட்டியில் பரமத்தி மலா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 11 ஆம் வகுப்பு மாணவா் கபித்சாம்ராஜ் கட்டா, கிளிக்கா் குமுட்டி போட்டியில் 15 வயதிற்கு உள்பட்டோா் பிரிவில் வெள்ளிப் பதக்கமும், 8 ஆம் வகுப்பு மாணவன் தரனீஷ் கட்டா, கிளிக்கா் குமுட்டி போட்டியில் 13 வயதிற்கு உள்பட்டோா் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று பள்ளிக்கு பெருமை சோ்த்துள்ளனா்.

அகில இந்திய கராத்தே போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாணவா்களை பள்ளியின் செயலாளா் கந்தசாமி, பொருளாளா் வெங்கடாசலம், பள்ளியின் துணைத் தலைவா் ராஜேந்திரன், துணைச் செயலாளா் தமிழ்ச்செல்வி தங்கராஜு. இயக்குநா்கள், முதல்வா் ராஜசேகரன், ஆசிரியா்கள் பாராட்டினா்.

Dinamani
www.dinamani.com