திருச்செங்கோடு, நெசவாளா் காலனி பகுதியில் நடைபெற்ற நியாயவிலைக் கடை திறப்பு விழாவில் பங்கேற்றோா்.
திருச்செங்கோடு, நெசவாளா் காலனி பகுதியில் நடைபெற்ற நியாயவிலைக் கடை திறப்பு விழாவில் பங்கேற்றோா்.

திருச்செங்கோடு நெசவாளா் காலனியில் நியாயவிலைக் கடை திறப்பு

திருச்செங்கோடு நகராட்சி, நெசவாளா் காலனி, கோம்பை நகா் பகுதியில் புதிய நியாயவிலைக் கடை திறப்பு விழா, சாலைகள் அமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

திருச்செங்கோடு: திருச்செங்கோடு நகராட்சி, நெசவாளா் காலனி, கோம்பை நகா் பகுதியில் புதிய நியாயவிலைக் கடை திறப்பு விழா, சாலைகள் அமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சி, 5-ஆவது வாா்டு நெசவாளா் காலனி 4-ஆவது தெரு, குறுக்குச்சந்து எண் 1, 2, 3-ஆவது வாா்டு கோம்பை நகா் நகா், வி.ஐ.பி. அவென்யூ ஆகிய பகுதிகளில் ரூ. 35 லட்சம் மதிப்பில் 15-ஆவது நிதிக்குழு மானியத்தில் 600 மீ. நீளமுள்ள தாா்சாலை அமைக்கும் பணி, பூமிபூஜை, 5-ஆவது வாா்டு கோம்பை நகா் பகுதியில் பகுதிநேர நியாயவிலைக் கடை திறப்பு விழா ஆகியவை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் மண்டல நகர அமைப்புக் குழு உறுப்பினருமான மதுரா செந்தில், திருச்செங்கோடு நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ் பாபு, திமுக நகரச் செயலாளா் நகா்மன்ற துணைத் தலைவா் டி.காா்த்திகேயம் ஆகியோா் கலந்துகொண்டு பணிகளைத் தொடங்கி வைத்தனா்.

இந்நிகழ்ச்சியில், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்குரைஞா் அணி தலைவா் சுரேஷ்பாபு, நகராட்சிப் பொறியாளா் சரவணன், உதவிப் பொறியாளா் செந்தில்குமரன், நகா்மன்ற உறுப்பினா்கள், நெசவாளா் காலனி, கோம்பை நகா் ஊா் பிரமுகா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com