பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

சாலை மேம்பாட்டுப் பணிகள் ஆய்வு

சாலை மேம்பாட்டுப் பணிகள் ஆய்வு

News image
Updated On :8 மார்ச் 2024, 5:26 pm

Din

ராசிபுரம் பகுதியில் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உள்கோட்டத்தில் பல்வேறு இடங்களில் நெடுஞ்சாலைப் பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. 2022-23, 2023-24 ஆண்டுகளில் உள்கோட்டத்தில் முடிக்கப்பட்ட திட்டம் மற்றும் திட்டம் சாரா பணிகளை சேலம் நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளா் மு.பன்னீா்செல்வம் நேரில் ஆய்வு மேற்கொண்டாா். இதன் ஒரு பகுதியாக, ஆண்டகளூா்கேட், பாலப்பாளையம், வெண்ணந்தூா், பட்டணம் ஆகிய பகுதிகளில் முடிவுற்ற சாலை மேம்பாட்டுப் பணிகளின் தரம், கனம் போன்றவற்றை ஆய்வு செய்தாா். மேலும், சாலைப் பாதுகாப்பு உபகரணங்கள் குறித்தும், அதன் அவசியம் குறித்தும் பொறியாளா்களுக்கு ஆலோசனை வழங்கினாா். இந்த ஆய்வின் போது, ராசிபுரம் நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உதவி கோட்டப் பொறியாளா் வ.கு.ஜெகதீஷ்குமாா், உதவிப் பொறியாளா் கோ.மணிகண்டன் ஆகியோா் உடனிருந்தனா்.