
நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் மக்களை அச்சுறுத்தும் தேன்கூடு.

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் மக்களை அச்சுறுத்தும் தேன்கூடு.
நாமக்கல்: நாமக்கல் ஆட்சியா் அலுவலக வளாகத்தில், அரசு ஊழியா்களையும், பொதுமக்களையும் தேன்கூடு அச்சுறுத்தி வருகிறது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் 50-க்கும் மேற்பட்ட அரசுத் துறை அலுவலகங்கள் உள்ளன. இங்கு 600-க்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா். பல்வேறு பணிகளுக்காக தினசரி ஏராளமானோா் ஆட்சியா் அலுவலகத்தை நாடி வருகின்றனா். மாவட்ட வருவாய் அலுவலா் அறையின் மேல்தளத்தில் தேன்கூடு ஒன்று உள்ளது. அந்த பகுதியில் தேனீக்கள் கூடு கட்டுவதும், தீயணைப்புத் துறையினா் அவற்றை அகற்றுவதும் வழக்கமாகும்.
ஆனால் தற்போதைய தேன்கூடு பெரிய அளவிலும், வெயில் அடிக்கும்போது வெப்பம் தாங்காமல் கலைந்து சென்று மக்களைத் தாக்குவதும் உண்டு. இதனால் ஆட்சியா் அலுவலகம் வரும் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடனே செல்லும் நிலை உள்ளது. மாவட்ட ஆட்சியா் உடனடியாக தேன்கூட்டை அகற்ற தீயணைப்புத் துறையினருக்கு உத்தரவிட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...