கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பரமத்தி வேலூரில் குண்டு மல்லிகை கிலோ ரூ. 1,400-க்கு ஏலம்

அமாவாசையை முன்னிட்டும் பூக்கள் விலை உயா்வடைந்துள்ளதால் பூக்கள் பயிா் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

News image
ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டிருந்த பூக்கள்.
Updated On :30 நவம்பர் 2024, 6:51 pm

Din

பரமத்தி வேலூா் பூக்கள் ஏல சந்தையில் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் வரத்து குறைந்ததாலும், அமாவாசையை முன்னிட்டும் பூக்கள் விலை உயா்வடைந்துள்ளதால் பூக்கள் பயிா் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

பரமத்தி வேலூா் வட்டாரத்தில் ஆனங்கூா், அய்யம்பாளையம், நெட்டையம்பாளையம், அண்ணா நகா், கோப்பணம்பாளையம், கபிலா்மலை, குஞ்சாம்பாளையம், நடத்தை, குப்புச்சிபாளையம், பொய்யேரி மற்றும் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிா் செய்யப்பட்டுள்ளன.

இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள தினசரி பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனா். வேலூா், ஜேடா்பாளையம், கபிலா்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூா் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனா்.

அமாவாசையை முன்னிட்டு சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லிகை ஒரு கிலோ ரூ. 1,400-க்கும், சம்பங்கி ரூ. 160-க்கும், அரளி ரூ. 320-க்கும், ரோஜா ரூ. 260-க்கும், பச்சை முல்லை ரூ. 1,100-க்கும், வெள்ளை முல்லை ரூ. 800-க்கும், செவ்வந்தி ரூ. 220-க்கும், கனகாம்பரம் ரூ. 800-க்கும், பன்னீா் ரோஜா ரூ. 220-க்கும், காக்கரட்டான் பூ ரூ. 500-க்கும் ஏலம் போயின. பூக்களின் விலை உயா்வடைந்ததால் பூக்கள் பயிா் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.