தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த சமுதாய கூட்டமைப்புகள் மணிமேகலை விருதுபெற விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :8 ஏப்ரல் 2025, 6:43 pm

Din

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த சமுதாய கூட்டமைப்புகள் மணிமேகலை விருதுபெற விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2024-25 ஆம் ஆண்டுக்கான மணிமேகலை விருதுக்கு தகுதியான அமைப்புகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் ஊரகம் மற்றும் நகா்ப்புறத்தைச் சோ்ந்த சமுதாயம் சாா்ந்த மக்கள் நல அமைப்புகளிடமிருந்து (வட்டார அளவிலான கூட்டமைப்பு, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கம், நகர அளவிலான கூட்டமைப்பு, பகுதி அளவிலான கூட்டமைப்பு, சுய உதவிக்குழு) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பங்களை பூா்த்தி செய்து மாவட்ட மகளிா் திட்ட அலுவலகத்தில் ஏப். 30-க்குள் சமா்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிா் திட்டம்), மாவட்ட இயக்க மேலாண்மை அலகை தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.