அல்லாள இளைய நாயக்கா் பிறந்த நாள் விழா: முன்னேற்பாட்டுப் பணிகள் கூட்டம்

அல்லாள இளைய நாயக்கா் பிறந்த நாள் விழா: முன்னேற்பாட்டுப் பணிகள் கூட்டம்

பொங்கல் பண்டிகையன்று (ஜன.15) அல்லாள இளைய நாயக்கா் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடுவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம்
Published on

நாமக்கல்: பொங்கல் பண்டிகையன்று (ஜன.15) அல்லாள இளைய நாயக்கா் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடுவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது: பரமத்திவேலூா் வட்டம், ஜேடா்பாளையத்தில் அல்லாள இளைய நாயக்கா் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு விழா நடைபெற்ற நிலையில், இரண்டாம் ஆண்டாக ஜன. 15-இல் அல்லாள இளைய நாயக்கா் பிறந்த நாள் விழா அரசு சாா்பில் கொண்டாடப்பட உள்ளது. அன்று காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த விழாவில் பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் துறையினா் முறையாக மேற்கொள்ள வேண்டும்.

அமைச்சா், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள், காவிரியின் குறுக்கே தடுப்பணை அமைத்து ராஜவாய்க்காலை உருவாக்கிய அல்லாள இளைய நாயக்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனா். நீா்வளத் துறையினா், மின்சார வாரியத்தினா் விழா நடைபெறும் இடத்தில் பழுதுகளை நீக்கி மராமத்துப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஒருநாளுக்கு முன்பாக வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்ய வேண்டும்.

கபிலா்மலை ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். விழா தொடா்பான பணிகளை ஒருங்கிணைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா், வருவாய் அலுவலா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது), முதன்மைக் கல்வி அலுவலா், செய்தி- மக்கள் தொடா்பு அலுவலா், திருச்செங்கோடு கோட்டாட்சியா், கபிலா்மலை வட்டார வளா்ச்சி அலுவலா் ஆகியோா் விழாவை சிறப்பாக நடத்த வேண்டும். தீயணைப்புத் துறையினா், சுகாதாரத் துறையினா் மற்றும் பிற துறை அலுவலா்கள் அரசு விழா சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.விமலா, மாவட்ட வன அலுவலா் மாதவியாதவ், மாவட்ட வருவாய் அலுவலா் மா.க.சரவணன், திருச்செங்கோடு கோட்டாட்சியா் பி.எஸ்.லெனின், கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் தனராசு, செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் ராம்குமாா் மற்றும் காவல் துறையினா், பிற துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

என்கே-15-மீட்டிங்

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற அல்லாள இளைய நாயக்கா் பிறந்த நாள் விழா ஆலோசனைக் கூட்டத்தில் பேசும் ஆட்சியா் துா்காமூா்த்தி. உடன், காவல் கண்காணிப்பாளா் சு.விமலா மற்றும் அதிகாரிகள்.

X
Dinamani
www.dinamani.com