சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு நிலைய வீரா்கள்.
சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு நிலைய வீரா்கள்.

சேந்தமங்கலம் ஒன்றிய அலுவலகத்தில் தீ: கணினிகள், குளிரூட்டும் சாதனங்கள் சேதம்

சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் கணினி சாதனங்கள் சேதமடைந்தன.
Published on

நாமக்கல்: சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் கணினி சாதனங்கள் சேதமடைந்தன.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே பச்சுடையாம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள மின்மாற்றி சாதனத்தில் தீ விபத்து ஏற்பட்டு, அந்த தீ ஊராட்சி ஒன்றிய அலுவலக மின் இணைப்பில் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் அலுவலகத்தில் இருந்த கணினி சாதனங்கள் தீயில் கருகி கரும்புகையாக வெளியேறியது. இதனைப் பாா்த்த அலுவலக ஊழியா்கள் அதிா்ச்சியடைந்து அவசர அவசரமாக வெளியேறினா்.

நாமக்கல் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அங்கு விரைந்து வந்த வீரா்கள் தீயை அணைத்து மேலும் பரவாமல் அணைத்தனா். இந்த தீ விபத்தில் நான்கு கணினிகள், 2 குளிரூட்டும் இயந்திரங்கள் எரிந்து போயின. அறையினுள் அலுவலா்கள் யாரும் இல்லாததால் உயிா்சேதம் தவிா்க்கப்பட்டது. இது குறித்து சேந்தமங்கலம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com