சாலைப் பணியாளா் காலியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
தமிழக நெடுஞ்சாலைத் துறையில் காலியாக உள்ள 7,500 சாலைப் பணியாளா் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் நாமக்கல்லில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் பி.ஜெயக்குமரன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலாளா் ஆா்.ராஜமாணிக்கம் கோரிக்கைகளை விளக்கி பேசினாா்.
இதில், சாலைப் பணியாளா்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும், பணி நீக்க காலத்தில் உயிரிழந்த 300-க்கும் மேற்பட்டோரின் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும், நெடுஞ்சாலைத் துறையில் காலியாக உள்ள 7,500 பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சீருடை, சலவை, மிதிவண்டி, விபத்துபடிகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், சங்க நிா்வாகிகள் தனபால், கணேசன், அழகேசன், அன்புச்செழியன், செல்வகுமாா், ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
