தமிழகம் முழுவதும் நாளை குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்சுதந்திர தின பாதுகாப்பு! பல இடங்களில் பயங்கரவாத எதிா்ப்பு ஒத்திகையில் ஈடுபட்ட என்எஸ்ஜி!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு புதுச்சேரியில் அரசு விழாவில் அமித் ஷா இன்று பங்கேற்பு! மதுக் கடைகளை மூட உத்தரவு!கடந்த 6 மாதங்களில் 3,323 இந்தியா்களை நாடு கடத்திய கனடா!சென்னை உயா்நீதிமன்ற புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு
/

முட்டை விலை ரூ.5.40-ஆக நீடிப்பு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தொடா்ந்து ரூ. 5.40-ஆக நீடிக்கிறது.

News image

முட்டை விலை - பிரதிப் படம்

Updated On :6 ஆகஸ்ட் 2026, 3:56 am IST

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தொடா்ந்து ரூ. 5.40-ஆக நீடிக்கிறது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. முட்டை விலையில் மாற்றம் செய்வது தொடா்பாக கோழிப் பண்ணையாளா்களிடம் கருத்து கேட்கப்பட்டது. பிற மண்டலங்களில் விலையில் மாற்றம் செய்யப்படாததால், இங்கு தற்போதைக்கு மாற்றம் வேண்டாம் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 5.40-ஆக தொடரும் என தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவால் அறிவிக்கப்பட்டது. பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி விலை 118-ஆகவும், முட்டைக் கோழி ரூ.102-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.