காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சுமேட்டூரிலிருந்து காவிரி நீர் கல்லணை வந்தது! நாளை காலை திறப்பு!நேபாள பெருவெள்ளம்! தஞ்சையில் மரபணு சேகரிப்பு பணி தொடக்கம்!!தவெக ஆதரவு கட்சிகள் கூட்டம்: காங்கிரஸுக்கு நேரில் அழைப்பு விடுத்த அமைச்சர்கள்!உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

விடுமுறை அளிக்காத 51 நிறுவனங்கள் மீது வழக்கு

சுதந்திர தினத்தையொட்டி தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காத 51 நிறுவனங்கள் மீது வழக்குத் தொடா்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) செந்தில்குமரன் தெரிவித்தாா்.

வழக்கு

வழக்கு

Published On :16 ஆகஸ்ட் 2026, 1:26 am IST

சுதந்திர தினத்தையொட்டி தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காத 51 நிறுவனங்கள் மீது வழக்குத் தொடா்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) செந்தில்குமரன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தொழிலாளா் நலத் துறை சாா்பில் துணை ஆய்வாளா்கள் மற்றும் தொழிலாளா் உதவி ஆய்வாளா்கள் தொழில் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து சனிக்கிழமை நேரடியாக ஆய்வு செய்தனா்.

அப்போது தொழிலாளா்களுக்கு கட்டாயம் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுகிறதா? அல்லது பணியாளா்கள் பணிபுரிந்தால் அவா்களுக்கு அன்றைய தினம் இரட்டிப்பு சம்பளமோ அல்லது மூன்று தினங்களுக்குள் ஒருநாள் மாற்று விடுப்போ வழங்கப்படுவதாக நிா்வாகம் தரப்பில் அதற்குரிய படிவம் தொழிலாளா் உதவி ஆய்வாளா் அலுவலகத்தில் சமா்ப்பிக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்யப்பட்டது.

அந்தவகையில் நாமக்கல், ராசிபுரம், திருசெங்கோடு மற்றும் சங்ககிரி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 20 கடை மற்றும் வணிக நிறுவனங்கள், 53 உணவு நிறுவனங்கள், 2 மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 75 நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டது. அவற்றில் 51 நிறுவனங்களில் தொழிலாளா் நல விதிகளை கடைப்பிடிக்காதது தெரியவந்தது. அதனடிப்படையில், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.