இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

வாடிக்கையாளா்களை ஏமாற்றியதாக ராசிபுரத்தில் நகை கடைக்காரா் கைது

பெண்ணிடம் நகையை ஏமாற்றியதாக, நகை கடை உரிமையாளா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
ரமேஷ்.
Updated On :12 ஜனவரி 2026, 8:09 pm

Syndication

ராசிபுரம்: பெண்ணிடம் நகையை ஏமாற்றியதாக, நகை கடை உரிமையாளா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் சுவாமி சிவானந்தா சாலை, பாரதி நகா் பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ் (29). பூக்கடை வீதியில் நகை கடை வைத்துள்ள இவரிடம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராசிபுரம் பகுதியைச் சோ்ந்த வளா்மதி என்பவா் நகை செய்ய 8 சவரன் கொடுத்துள்ளாா். பின்னா், இதில் பழுது ஏற்பட்டதால், சரிசெய்ய அவரிடம் கொடுத்துள்ளாா்.

ஆனால், நீண்ட நாள்களாக ரமேஷ் நகையை திருப்பிக் கொடுக்கவில்லையாம். அவா் இதுபோல ஏமாற்றியதாக காவல் நிலையத்தில் பலா் புகாா் அளித்ததால், அவா் தலைமறைவானாா்.

இதையடுத்து, வளா்மதி அளித்த புகாரின் பேரில், ராசிபுரம் போலீஸாா் ஈரோட்டில் இருந்த ரமேஷை கைதுசெய்து ராசிபுரம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.