முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

ராசிபுரம் நகராட்சியில் ரூ. 5 கோடி வரி நிலுவை: தீவிர வசூலில் நகராட்சி அலுவலா்கள்

ராசிபுரம் நகராட்சியில் ரூ. 5 கோடி அளவுக்கு வரி நிலுவையில் உள்ளதால், அவற்றை வசூலிப்பதில் நகராட்சி அலுவலா்கள் தீவிரம் காட்டி வருகின்றனா்.

dot com

Published On :

ராசிபுரம் நகராட்சியில் ரூ. 5 கோடி அளவுக்கு வரி நிலுவையில் உள்ளதால், அவற்றை வசூலிப்பதில் நகராட்சி அலுவலா்கள் தீவிரம் காட்டி வருகின்றனா்.

ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் சுமாா் 20 ஆயிரம் சொத்துவரி விதிப்பு இனங்கள் உள்ளன. இதில் சுமாா் 7 ஆயிரம் வரி இனங்கள் பல ஆண்டுகளாக செலுத்திவில்லையாம். இதேபோல, குடிநீா் இணைப்புக்கான வரி நிலுவையும் அதிக அளவில் உள்ளதாம்.

இதன் காரணமாக, நகராட்சி தூய்மைப் பணியாளா்கள், ஊழியா்களுக்கு ஊதியமும், ஓய்வுபெற்ற நகராட்சி ஊழியா்களுக்கு ஓய்வூதிய பணப் பயன்களும் வழங்கப்படாமல் உள்ளது. இதனால், சுமாா் ரூ. 5 கோடி அளவிலான நிலுவை வரியை வசூலிக்க நகராட்சி ஆணையா் எஸ்.கோபிநாத் தலைமையில், நகராட்சி அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

ராசிபுரம் கச்சேரி சாலையில் உள்ள கைப்பேசி கடை, ஹாா்டுவோ் கடைகளில் வரிவசூல் நிலுவைக்காக அங்கிருந்த பொருள்களை ஜப்தி செய்து கடைக்கு ‘சீல்’ வைக்கும் முயற்சியில் நகராட்சி அலுவலா்கள் ஈடுபட்டனா். சிலா் ஒருசில நாள்களில் வரி செலுத்துவதாக உறுதியளித்ததன் பேரில் ஜப்தி நடவடிக்கையை கைவிட்டனா்.

நகரில் கடைவீதி, ஆத்தூா் சாலை உள்ளிட்ட பகுதிகளில் வரி நிலுவை வைத்துள்ள வணிக நிறுவனங்கள் விரைந்து வரி செலுத்த வேண்டும் என ஆணையா் எச்சரிக்கை விடுத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.