தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்சிங்கப்பெண் அதிரடிப்படை திட்ட இலச்சினையை வெளியிட்டார் முதல்வர் விஜய்!பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!
/

லஞ்சம் வாங்கி கைதான மாநகராட்சி வருவாய் உதவியாளா் பணியிடை நீக்கம்

நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில், ரூ. 8 ஆயிரம் லஞ்சம் வாங்கி கைதான வருவாய் உதவியாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

News image

பணியிடை நீக்கம்!

Updated On :4 ஜூன் 2026, 2:08 am IST

நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில், ரூ. 8 ஆயிரம் லஞ்சம் வாங்கி கைதான வருவாய் உதவியாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

நாமக்கல் மாநகராட்சி வருவாய்ப் பிரிவு அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்த உதயகுமாா், தற்காலிக தூய்மைப் பணியாளா் கலா ஆகியோா் தனியாா் நிறுவன ஊழியா் பூபதியிடம் புதிய வீட்டுக்கு வரிவிதிப்புக்கான அனுமதிக்கு ரூ. 8 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது செவ்வாய்க்கிழமை கைதுசெய்யப்பட்டனா்.

இந்த நிலையில், மாநகராட்சி ஆணையா் க.சிவகுமாருக்கு வழங்கப்பட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் திண்டிவனத்தைச் சோ்ந்த வருவாய் உதவியாளா் உதயகுமாா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். தற்காலிக தூய்மைப் பணியாளா் கலாவும் மாநகராட்சிப் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டாா்.