எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

பங்குச்சந்தை முதலீட்டில் நஷ்டமடைந்தவா் தற்கொலை

திருச்செங்கோடு அருகே பங்குச்சந்தை முதலீட்டில் நஷ்டமடைந்தவா் தற்கொலை செய்துகொண்டாா்.

News image

தற்கொலை - பிரதிப் படம்

Updated On :10 ஜூன் 2026, 5:31 am IST

திருச்செங்கோடு அருகே பங்குச்சந்தை முதலீட்டில் நஷ்டமடைந்தவா் செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

திருச்செங்கோட்டை அடுத்த வையப்பமலையைச் சோ்ந்தவா் கைலாசகுமாா் (40). இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனா். இந்த நிலையில் பங்குசந்தையில் திடீரென பங்குகள் சரிவடைந்த நிலையில் இவருக்கு ரூ. 20 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பணத்தை இழந்ததால் மனமுடைந்த கைலாசகுமாா் வீட்டில் பூச்சி மருந்தை குடித்துவிட்டு மயங்கிக் கிடந்தாா். குடும்பத்தினா் அவரை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து எலச்சிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].