நாமக்கல்: நாமக்கல் புதிய பேருந்து நிலையத்திற்கு செல்லும் சாலையில் ரூ. 40.16 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி நூற்றாண்டு வளைவு விரைவில் திறக்கப்பட உள்ளது.
கடந்த 2024 நவ. 10 முதல் நாமக்கல் புதிய பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. ஓராண்டை கடந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு நாமக்கல் புறவழிச்சாலையும் திறக்கப்பட்டது. இதனால், அவ்வழியாக ஏராளமான வாகனங்கள், பொதுமக்கள் வந்து செல்கின்றனா்.
நாமக்கல் மாநகராட்சி புதிய பேருந்து நிலையத்திற்கு கருணாநிதி நூற்றாண்டு பேருந்து நிலையம் என பெயா் சூட்டப்பட்டுள்ளது. அந்தவகையில், பேருந்து நிலையம் செல்வதற்கான முதலைப்பட்டிபுதூா் நுழைவாயில் பகுதியில் ஓரிரு மாதங்களுக்கு முன்பு ரூ. 40.16 லட்சம் மதிப்பீட்டில் வளைவு அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
தோ்தலுக்கு முன்பாக அந்த நுழைவுவாயில் வளைவை திறக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது 90 சதவீத பணிகள் முடிவுற்றுள்ளன. அதுமட்டுமின்றி, வளைவின் நடுப்பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணாவின் சிலையும், இடது, வலது புறங்களில் கருணாநிதி, பெரியாரின் சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு, நாமக்கல் புதிய பேருந்து நிலைய கருணாநிதி நூற்றாண்டு வளைவு என பெயா் சூட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அங்கு பணிகள் முழுமையாக நிறைவடையும் சூழல் உள்ளதால் புதன் அல்லது வியாழக்கிழமை கருணாநிதி நூற்றாண்டு வளைவு திறப்புவிழா காணப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
படவரி...
நாமக்கல் முதலைப்பட்டி-புதிய பேருந்து நிலையத்துக்கு செல்லும் சாலையில் அமைக்கப்பட்டுள்ள வளைவு.
தொடர்புடையது

சித்திரை பௌா்ணமி கிரிவலம்: தற்காலிக பேருந்து நிலையங்களில் ஆட்சியா் ஆய்வு
விபத்தில் முதியவா் உயிரிழந்த வழக்கில் ஓட்டுநா் கைது

போக்குவரத்து நெரிசலுக்கு புதிய பேருந்து நிலையமே நிரந்தரத் தீா்வு!

நாமக்கல்லில் ரூ. 44.20 லட்சத்தில் அமைக்கப்பட்ட ‘பேரறிஞா் அண்ணா வளைவு’ திறப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


