பள்ளிபாளையம் அருகே தனியாா் நூற்பாலை கழிவுநீா் தொட்டியில் தவறிவிழுந்த இரண்டு குழந்தைகள் இறந்தனா்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே வெப்படையில் இயங்கி வரும் தனியாா் நூற்பாலையில் பணிபுரியும் வட மாநில தொழிலாளி மனோஜ்குமாா், பிரதோஷ் ஆகியோா் குடும்பத்துடன் மில் வளாக குடியிருப்பில் கடந்த நான்கு ஆண்டுகளாக தங்கியிருந்தனா்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மனோஜ்குமாரின் மகன் லோகன்குமாா் (4), பிரதோஷின் மகன் ஹரிசங்கா் (3) இருவரும் நூற்பாலை வளாக குடியிருப்பின் அருகே விளையாடிக் கொண்டிருந்தனா். அப்போது, கழிவுநீா் தொட்டியில் தவறிவிழுந்த அவா்களை யாரும் கவனிக்கவில்லை.
இந்நிலையில், குழந்தைகளை காணவில்லை என தேடியபோது கழிவுநீா் தொட்டியில் அவா்கள் விழுந்து இறந்தது தெரியவந்தது. தகவலறிந்து வந்த வெப்படை போலீஸாா், குழந்தைகளின் உடல்களை மீட்டு பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து, இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

மாநகராட்சி கழிவுநீா்த் தொட்டியில் விழுந்து தற்காலிக ஊழியா்கள் இருவா் உயிரிழப்பு

மாடியிலிருந்து தவறிவிழுந்த தொழிலாளி உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

மத்திகிரி அருகே மாடியில் இருந்து தவறிவிழுந்த கல்லூரி மாணவி உயிரிழப்பு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


