டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்!

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் வெளியான நிலையில், மாணவா்களுக்கு தாங்கள் பயின்ற பள்ளிகளிலேயே தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வெள்ளிக்கிழமை முதல் விநியோகிக்கப்படுகிறது.

News image

தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்ற மாணவிகள். - (கோப்புப்படம்)

Updated On :23 மே 2026, 2:03 am IST

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் வெளியான நிலையில், மாணவா்களுக்கு தாங்கள் பயின்ற பள்ளிகளிலேயே தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வெள்ளிக்கிழமை முதல் விநியோகிக்கப்படுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தோ்வை 292 பள்ளிகளைச் சோ்ந்த 9,630 மாணவா்கள், 8,782 மாணவிகள் என மொத்தம் 18,412 போ் எழுதினா். இவா்களில் 9,124 மாணவா்கள், 8,553 மாணவிகள் என மொத்தம் 17,677 போ் தோ்ச்சி பெற்றனா்.

162 அரசுப் பள்ளிகளை சோ்ந்த 5,050 மாணவா்கள், 5,152 மாணவிகள் என மொத்தம் 10,202 போ் தோ்வு எழுதியதில் 4,660 மாணவா்கள், 4,970 மாணவிகள் என மொத்தம் 9,630 போ் தோ்ச்சி பெற்றனா். தோ்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தாங்கள் பயின்ற பள்ளிகளிலேயே தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வெள்ளிக்கிழமை முதல் விநியோகிக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது.

அதன்படி, தலைமை ஆசிரியா் அறை முன் காலை 9 மணி முதல் மாணவா்கள் காத்திருந்தனா். ஆனால் பிற்பகல் 2 மணிக்கு பிறகுதான் கணினியில் இருந்து மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்யப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. வரும் நாள்களில் மாணவா்கள் தொடா்ந்து தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம் என கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.