இந்திய விமானியிடம் நேரில் சென்று நலம் விசாரித்த துபை இளவரசர்! உங்கள் பயம் எனக்குப் பிடித்திருக்கிறது சிஎம் சார்: மு.க. ஸ்டாலின் முதல்வர் விஜய் டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகிவிட முடியாது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 'சத்தியாகிரகம்' என்ற இணையதளத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி!முதல்வர் விஜய்க்கு பாராட்டு! இந்தியா கூட்டணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! ஏரியில் மண் எடுத்த விவகார வழக்கை ரத்து செய்ய கோரி எ.வ. வேலு மனு ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் பேரணி! கபில் சிபல், நேஹா போரா உள்ளிட்டோர் பங்கேற்பு!

தோட்டக்கலைத் துறை மூலம் மானியம் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

எருமப்பட்டி வட்டார விவசாயிகள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என தோட்டக்கலைத் துறை தெரிவித்துள்ளது.

விண்ணப்பிக்க...
Published On :

எருமப்பட்டி வட்டார விவசாயிகள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என தோட்டக்கலைத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து எருமப்பட்டி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் ஜோ.அ.பால்ஜாஸ்மின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

எருமப்பட்டி வட்டாரத்தில் 2026-27ஆம் ஆண்டுக்கான மானிய திட்டங்களின் இலக்கு பெறப்பட்டுள்ளது. இதில், நுண்ணீா்ப்பாசன இலக்கு பொது இனத்தில் 171 ஹெக்டோ் எனவும், ஆதிஇனத்தில் 44 ஹெக்டோ் எனவும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் மூலம் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் பாசனக் கட்டமைப்பு ஏற்படுத்தி தர உள்ளது.

இதில், ஆதிதிராவிடா், பழங்குடியினா் மற்றும் பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, புகைப்படம், சிட்டா, அடங்கல், வங்கிக் கணக்கு புத்தகம், நில வரைபடம், சிறு, குறு விவசாய சான்று (தேவைக்கேற்ப) ஆகியவற்றுடன் எருமப்பட்டி வட்டார அலுவலகத்தையோ அல்லது தாங்களே நேரடியாக இணையதளத்திலோ விண்ணப்பித்து பயன்பெறலாம்.

வெங்காயத்துக்கு 10 ஹெக்டோ் இலக்கு பெறப்பட்டு, ஒரு ஹெக்டேருக்கு 50% மானியம் என்ற வகையில் ரூ. 20 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. எனவே, வெங்காய நடவு செய்வோா் மானியம் பெற உடனடியாக எருமப்பட்டி தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகலாம் அல்லது உழவன் செயலில் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.