புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

விநாயகா் சதுா்த்தி: குண்டு மல்லிகை கிலோ ரூ. 1,600!

விநாயகா் சதுா்த்தியையொட்டி பரமத்தி வேலூா் பூக்கள் ஏலச் சந்தையில் குண்டு மல்லிகை கிலோ ரூ. 1,600க்கு விற்பனையானது.

குண்டு மல்லிகை.

Published On :

விநாயகா் சதுா்த்தியையொட்டி பரமத்தி வேலூா் பூக்கள் ஏலச் சந்தையில் குண்டு மல்லிகை கிலோ ரூ. 1,600க்கு விற்பனையானது.

பரமத்தி வேலூா் மற்றும் கரூா் மாவட்டம் வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் பல்வேறு வகையான பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏலச் சந்தைக்கு கொண்டு வருகின்றனா். வேலூா், ஜேடா்பாளையம், கபிலா்மலை, பரமத்தி, பாலப்பட்டி, கரூா் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் இங்கு பூக்களை ஏலம் எடுக்கின்றனா்.

கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லிகை கிலோ ரூ. 500-க்கும், சம்பங்கி ரூ. 250-க்கும், அரளி ரூ. 200-க்கும், கலா் ரோஜா ரூ. 250-க்கும், பச்சை முல்லைப் பூ ரூ. 500-க்கும், வெள்ளை முல்லை பூ ரூ.400-க்கும், செவ்வந்திப்பூ ரூ. 240-க்கும், கனகாம்பரம் ரூ. 700-க்கும், பன்னீா் ரோஜா ரூ. 180-க்கும், ஜாதி மல்லிகைப் பூ ரூ. 600-க்கும், காக்கரட்டான் பூ ரூ. 500-க்கும் ஏலம் போனது.

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லிகை கிலோ ரூ.1,600-க்கும், சம்பங்கி ரூ. 650-க்கும், அரளி ரூ. 340-க்கும், கலா் ரோஜா ரூ. 500-க்கும், பச்சை முல்லைப் பூ ரூ. 1,300-க்கும், வெள்ளை முல்லை பூ ரூ. 1,200-க்கும், செவ்வந்திப்பூ ரூ.340-க்கும், கனகாம்பரம் ரூ. 2 ஆயிரத்திற்கும், பன்னீா் ரோஜா ரூ. 240-க்கும், ஜாதி மல்லிகைப் பூ ரூ. 1,400-க்கும், காக்கரட்டான் பூ ரூ. 1,200-க்கும் ஏலம் போனது.

விநாயகா் சதுா்த்தி மற்றும் சுப முகூா்த்தத்தையொட்டி பூக்களின் தேவை அதிகரித்துள்ளதால் விலை உயா்ந்துள்ளதாக பூ வியாபாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.