8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

ஆடித் திருவிழா: சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் பொங்கல் வைத்து வழிபாடு

ஆடித் திருவிழாவையொட்டி, சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.

Published On :30 ஜனவரி 2024, 9:57 pm IST

ஆடித் திருவிழாவையொட்டி, சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.
சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா கடந்த இரு வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. இதனிடையே திங்கள்கிழமை சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து,  செவ்வாய்க்கிழமை ஆடித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி  தொடங்கியது.
இதைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் இருந்து பெருமளவிலான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து பொங்கலிட்டும், மாவிளக்கு எடுத்தும் அம்மனை வழிபட்டு வருகின்றனர்.
 கூட்டம் அதிகமாக இருப்பதால் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் வழிபாடு செய்தனர். புதன்கிழமை காலையும் ஏராளமான பக்தர்கள் கோயில் வளாகத்தில் பொங்கலிட்டு வழிபாடு செய்தனர்.
மேலும் மாநகரப் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில்களில் இருந்து பக்தர்கள் மேள, தாளத்துடன் அக்னிக் கரகங்களை ஊர்வலமாக எடுத்து வந்து கோட்டை மாரியம்மனை வழிபட்டனர்.
ஆடித் திருவிழாவையொட்டி சேலம் மாநகரப் பகுதியில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது.
ஆடிப் பண்டிகையை முன்னிட்டு குகை மாரியம்மன் கோயில், காளியம்மன் கோயிலில் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அம்மாப்பேட்டை செங்குந்தர் மாரியம்மன், பலப்பட்டறை மாரியம்மன், அன்னதானப்பட்டி மாரியம்மன், செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன், பட்டைக்கோயில் சின்னமாரியம்மன், பொன்னம்மாபேட்டை புத்துமாரியம்மன் கோயில் உள்ளிட்ட மாநகரத்தில் உள்ள அனைத்து அம்மன் கோயில்களிலும் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். 
அதேபோல குகை மாரியம்மன், காளியம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் புதன்கிழமை மாலை தீ மிதித் திருவிழாவும் சிறப்பாக நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.