1.1.2019 - ஐ தகுதி நாளாக கொண்ட சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணி செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அக்டோபர் 31 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் சிறப்பு சுருக்க முறை திருத்தம் - 2019 குறித்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
இதுதொடர்பாக ஆட்சியர் கூறியிருப்பதாவது:
1.1.2019 - ஐ தகுதி நாளாக கொண்ட சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணிகள் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அக்டோபர் 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. 31.12.2000 அன்று அல்லது அதற்கு முன்னர் பிறந்த (18 வயது பூர்த்தியடைந்தவர்கள்) அனைத்து நபர்களும் தங்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.
தகுதி வாய்ந்த அனைவரும் படிவம் - 6 விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலகங்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலகங்கள் மற்றும் வாக்குச்சாவடி மையங்களில் அளிக்கலாம்.
மேலும், செப்டம்பர் 8, 22 மற்றும் அக்டோபர் 6, 13 ஆகிய தேதிகளில் சிறப்பு கிராம சபை நடத்தப்பட்டு, வரைவு வாக்காளர் பட்டியல் படிக்கப்பட உள்ளது. இத்துடன் செப்டம்பர் 9, 23 மற்றும் அக்டோபர் 7 மற்றும்14 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு முகாம்கள் அந்தந்த வாக்குச் சாவடி மையங்களில் நடைபெற உள்ளது.
சிறப்பு முகாம் நாள்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் உரிய வாக்காளர் பட்டியல் விவரங்கள் மற்றும் போதுமான படிவங்களுடன் மையங்களில் இருந்து விண்ணப்பங்களைப் பெற உள்ளனர்.
இந்த சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணியின் போது அனைத்து வாக்குச்சாவடி முகவர்களும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பணி சிறப்பாக நடைபெற உரிய ஒத்துழைப்பை தர வேண்டும் என்றார்.
கூட்டத்தில் பேசிய அரசியல் கட்சியினர், ஒவ்வொரு தொகுதியிலும் உயிரிழந்தவர்கள் என 10 ஆயிரத்துக்கும் மேலானவர்கள் உள்ளனர். அவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். தற்போதைய மின்னணு வாக்குப்பதிவு இயந்திர முறைக்குப் பதிலாக வாக்குச்சீட்டு முறையைக் கொண்டுவர வேண்டும்.
மேலும் மாநகராட்சியில் உள்ள மண்டல பகுதிகளில் வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தி பேசினர்.
கூட்டத்தில் உதவி -ஆட்சியர் (பயிற்சி) வந்தனா கார்க், மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் இரா.சுகுமார் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வேலை இல்லை என்பதால் பிக் பாஸ் சென்றேன்: திவ்யா கணேசன்

லோன் மூலமாக லிவர்பூல் அணியில் இணைந்த பார்சிலோனாவின் கேப்டன்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுமா இந்திய அணி?

பாலியல் குற்றச்சாட்டு! தில்லி கேபிடல்ஸ் வீரர் அபிஷேக் போரல் கைது!
விடியோக்கள்

உங்களுக்கும் சிபிஐ வழக்கு இருக்கு! Udhayanidhi Vs N Anand! | TN Assembly


