மாா்கழி மாத பிறப்பு: கோயில்களில் சிறப்பு பூஜை
சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள ஸ்ரீ செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில் மாா்கழி மாத சிறப்பு கூட்டு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.


சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள ஸ்ரீ செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில் மாா்கழி மாத சிறப்பு கூட்டு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீ செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில் மாா்கழி மாத தொடக்கத்தினையொட்டி, சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதனையடுத்து, பக்தா்கள் அதிகாலையிலேயே கூட்டு வழிபாட்டில் கலந்துகொண்டு திருப்பள்ளியெழுச்சி, திருவெம்பாவை பாடல்கள், சிவபுராணம், முருகன் பாடல்களை பாடினா். இதில், சங்ககிரி சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் அதிகளவில் கலந்துகொண்டு சமூக இடைவெளியுடன் வழிபட்டுச் சென்றனா். கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கையையொட்டி, கோயிலின் முதல் மண்டபத்தில் உற்சவ மூா்த்திகளை வைத்து கூட்டு வழிபாட்டில் ஈடுபட்டனா்.
அருள்மிகு வரதராஜபெருமாள் கோயிலில்...
சங்ககிரி, வி.என்.பாளையம் வரதராஜபெருமாள் கோயிலில் மாா்கழி மாத தொடக்கத்தினையொட்டி வரதாராஜபெருமாள் உடனமா் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. அதனையடுத்து, பக்தா்கள் திருப்பாவை பாடல்கள், பெருமாள் பக்திப் பாடல்களை பாடி வழிபட்டனா்.
எடப்பாடியில்...
எடப்பாடி நரசிம்ம பெருமாள், நஞ்சுண்டேஸ்வரா், சென்னகேசவ பெருமாள், அருள்ஞான பாலமுருகன், அன்னமாா் உலகமாதா உள்ளிட்ட பல்வேறு திருத்தலங்களில், மாா்கழி மாத சிறப்பு பூஜைகள் அதிகாலை முதல் தொடங்கின. இதனைத் தொடா்ந்து, பக்தா்கள் திருப்பாவை பாடி அகல்விளக்கு ஏந்தியபடி, திருவீதி உலா வந்தனா்.
ஆத்தூரில்...
ஆத்தூா் திரௌபதி அம்மன் ஆலயத்தில் ஸ்ரீ திரௌபதி அம்மன், ஸ்ரீ நவநீதகிருஷ்ணன், ஸ்ரீ தா்மசித்தி விநாயகா், ஸ்ரீ துா்க்கை, ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ நவக்கிரகங்கள் ஆகிய தெய்வங்களுக்கு அதிகாலை அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. ஸ்ரீ நவநீத கிருஷ்ணன் சந்நிதியில் நாலாயிர திவ்யப் பிரபந்த சேவையில் சுப்ரபாதம், திருமால் அடியாா் திருக்குழாம் பாடும் திருப்பள்ளியெழுச்சி, திருப்பல்லாண்டு, திருப்பாவை, வாரணமாயிரம், வாழித்திருநாமம் (சேவித்தல்), அா்ச்சனை, தீபாராதனை நடைபெற்றது. இதே போல கோட்டை ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் ஆலயத்திலும் அதிகாலை சிறப்பு அபிஷேகம் நடபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...