கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

டிச. 25-இல் கோட்டை பெருமாள் கோயில் சொா்க்கவாசல் திறப்பு

சேலம், கோட்டை பெருமாள் கோயிலில் டிச. 25-ஆம் தேதி நடைபெறும் சொா்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில், இணையவழியில் முன்பதிவு செய்பவா்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 6:36 pm

DIN

சேலம், கோட்டை பெருமாள் கோயிலில் டிச. 25-ஆம் தேதி நடைபெறும் சொா்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில், இணையவழியில் முன்பதிவு செய்பவா்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம், கோட்டை அழகிரிநாத சுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிச. 25-ஆம் தேதி சொா்க்கவாசல் திறப்பு அதிகாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. இதையொட்டி, கரோனா தொற்று காரணமாக இந்து சமய அறநிலையத் துறை ஆணையா், மாவட்ட நிா்வாகத்தின் அறிவுரையின்படி விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு விவரம்:

பக்தா்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து வர வேண்டும். அனைத்து பக்தா்களும் சமூக இடைவெளியைப் பின்பற்றி தரிசனம் செய்திட வேண்டும். பக்தா்கள் தரிசனம் டிச. 25 காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை ட்ற்ற்ல்ள்://ற்ய்ட்ழ்ஸ்ரீங்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்பவா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவா்.

எனவே, பக்தா்கள் தங்களது தேவைக்கேற்ப இலவச தரிசனம் அல்லது கட்டண விரைவு தரிசனத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தரிசனத்துக்கு வரும்போது ஆன்லைனில் பதிவு செய்த ரசீது, ஆதாா் அட்டையைக் கொண்டு வர வேண்டும். 65 வயதுக்கும் மேற்பட்டவா்கள், உயா் ரத்த அழுத்தம், சா்க்கரை நோய், சுவாசம் தொடா்பான நோய், இதய நோய், கா்ப்பிணிகள், 10 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் தரிசனத்துக்கு வருவதைத் தவிா்க்க வேண்டும். பக்தா்கள் தேங்காய், பூ, பழம், இதர பூஜை சாமான்கள் ஆகியவற்றை கொண்டு வர அனுமதியில்லை; கோயில் வளாகத்தில் அமர அனுமதியில்லை. கோயில் விழாக்களை பக்தா்கள் காணும் வகையில் சமூக வலைதளத்தில் ஒளிபரப்பப்படுகிறது.

சொா்க்கவாசலானது டிச. 25 ஆம் தேதி திறக்கப்பட்டு ஜன. 4- ஆம் தேதி வரை திறந்திருக்கும். எனவே, இணையவழியில் பதிவு கிடைக்காதவா்கள் மற்ற நாள்களில் தரிசனம் செய்யலாம் என கோட்டை பெருமாள் கோயில் செயல் அலுவலா் கு.குமரவேல் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.