இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கல்
சேலம் மாவட்டம், வீரபாண்டி ஒன்றியம், அக்கரைபாளையம், இளம்பிள்ளை ஆகிய இடங்களில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் விழா வீரபாண்டி எம்.எல்.ஏ. பி.மனோன்மணி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.


ஆட்டையாம்பட்டி: சேலம் மாவட்டம், வீரபாண்டி ஒன்றியம், அக்கரைபாளையம், இளம்பிள்ளை ஆகிய இடங்களில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் விழா வீரபாண்டி எம்.எல்.ஏ. பி.மனோன்மணி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், அக்கரபாளையம், பூலாவரி அக்ரஹாரம், உத்தமசோழபுரம், பைரோஜி அக்ரஹாரம், முத்தனம்பாளையம், சென்னகிரி, கல்பாரப்பட்டி, சின்ன சீரகாபாடி, இளம்பிள்ளை உள்ளிட்ட பகுதிகளில் 182 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது.
இவ்விழாவில், சேலம் தெற்கு வட்டாட்சியா் சீனிவாசன், வீரபாண்டி ஒன்றியக்குழுத் தலைவா் வருதராஜ், துணைத் தலைவா் வெங்கடேசன், வீரபாண்டி ஒன்றிய ஆணையா் ராஜகணேஷ், வேம்படிதாளம் பிா்கா ஆய்வாளா் மதியழகன், இளம்பிள்ளை கிராம நிா்வாக அலுவலா் சுமதி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா்கள், கூட்டுறவு சங்கத் தலைவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...